தேர்தலில் வாக்களிக்க அடையாள ஆவணமாக பூத் சிலிப் ஏற்றுக்கொள்ளப்படாது…

Read Time:2 Minute, 34 Second

தேர்தலில் வாக்களிக்க அடையாள ஆவணமாக பூத் சிலிப் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.

எனவே நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஆணையத்தால் மாற்று ஆவணமாக குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்தை வாக்காளர்கள் எடுத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற ஆவணங்கள்

வாக்களிக்க கொண்டு செல்ல வேண்டிய பிற ஆவணங்களையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

 • பாஸ்போர்ட்,
 • ஆதார் அட்டை,
 • ஓட்டுநர் உரிமம்,
 • மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
 • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,
 • வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு),
 • தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,
 • தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,
 • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
 • நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டு தொடர்ந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதில் இந்த தகவல் தடித்த எழுத்துகளில் அச்சிடப்பட்டு இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.