சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு

போதிய மழை பெய்யாததால் தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்து அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன. அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஊரெங்கும் திருவிழாக் கோலம்... மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!

Thu Mar 21 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email தமிழில் 12 வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12-வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாக காணப்படும். தமிழகத்தில் பெருமாள், சிவன், முருகன், சாஸ்தா, அம்பாள் கோவில்களில் திருவிழாவும், திருமணக்காட்சிகளும் நடைபெறும் நாள் இதுவாகும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், […]

அதிகம் வாசிக்கப்பட்டவை