நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு ‘படுமோசம்’…!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு ‘படுமோசம்’ என கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து அம்மாநில மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டதாக வாக்காளர்களின் மனநிறைவு அடிப்படையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தில் 20,178 வாக்காளர்களிடம் அம்மாநில எம்.பி.க்கள் செயல்பாடு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.

கருத்து தெரிவித்தவர்களில் 52.4 சதவீதம் பேர் எம்.பி.க்களின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் எம்.பி.க்கள் செயல்பாடு மனநிறைவு என்றும், 24 சதவீதம் பேர் அனைத்து எம்.பி.க்களும் மனநிறைவு அளிக்கும்படி செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இப்பட்டியலில் கேரளா, ராஜஸ்தான், குஜராத், மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முதலிடங்களை பிடித்துள்ளது. எம்.பி.க்கள் செயல்பாட்டில் முதல் 5 இடங்களில் பாஜக ஆளும் இரு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யூனியன் பிரதேசங்களை கணக்கில் கொள்ளவில்லை என்றால் தமிழகத்திற்குதான் கடைசி இடமாகும்.

தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்கவில்லை, மிகமோசம் என மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு மக்களவையில் 37 எம்.பி.க்கள் இருக்கின்றனர். இவர்களின் செயல்பாடு குறித்து 27268 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

43 சதவீதம் பேர் எம்.பி.க்களின் செயல்பாட்டிலும் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

18.2 சதவீதம் பேர் மட்டுமே எம்.பி.க்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும், 23.3 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிகர மனதிருப்தி அடிப்படையில் பார்த்தால், தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு மைனஸ் 1.5 சதவீதமாக இருக்கிறது. இப்போது அதிமுக, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இருக்கிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

80 எம்.பி.க்களை கொண்ட மாநிலத்தில் 47ஆயிரத்து 815 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டதில், 28.2 சதவீதம் பேர் மட்டும் எம்.பி.க்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். 43.3 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாட்டில் திருப்தியில்லை என்றும், 23 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மனநிறைவு 8.2 சதவீதம் மட்டுமே. மன நிறைவு அடிப்படையில் உத்தரப்பிரதேச எம்.பி.க்களும், தமிழக எம்.பி.க்களும் ஏறக்குறைய ஒரே சதவீதத்தையே பெறுகின்றனர். மிக மோசமாக தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு வாக்காளர்கள் மனநிறைவு அடிப்படையில் எதிர்மறையாக இருக்கிறது.

Next Post

பா.ஜனதா கட்சி தலைமை சொல்வதற்கு முன்னரே வேட்பாளர்கள் அறிவிப்பு...!

Thu Mar 21 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email பா.ஜனதா கட்சி தலைமை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடவுள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வேட்பாளர்கள் யாரென்று தெரியாத நிலை தொடர்ந்தது. அதிகாரப்பூர்வமாக எந்தஒரு அறிவிப்பும் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை