கோவிலில் செல்பி எடுக்க சென்றவரை புரட்டியெடுத்த யானை…!

Read Time:1 Minute, 55 Second

கேரளாவில் செல்பி எடுக்க சென்ற இளைஞரை யானை புரட்டியெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள செல்பி மோகத்தால் அவர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பிரச்சனைதான் நேரிடுகிறது. விலங்குகள் தாக்கும் என தெரிந்தும் அவைகளை சீண்டும் செயல் தொடர்ந்து வருகிறது.

ஆலப்புழாவில் தேவி கோவிலில் இரண்டு யானைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. யானைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோவிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், செல்பி எடுக்க முயற்சி செய்கிறார். யானைகளின் பாகன்கள் யாரும் அங்கு இல்லை. அப்போது கோபம் அடைந்த யானை இளைஞரை தந்தத்தால் கீழே முட்டி தள்ளுகிறது. பின்னர் கீழே விழுந்த இளைஞரை மீண்டும் இழுத்து தாக்குகிறது. யானை கட்டப்பட்டு இருந்ததால் அதனால் மேற்கொண்டு நகர முடியவில்லை.

இதற்கிடையே அங்கிருந்தவர்கள் மற்றும் யானைகளின் பாகன்கள் யானையின் கவனத்தை திசைதிருப்பினர். படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செல்பி எடுக்க முயன்றவர்களை விலங்குகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றும் இதுபோன்று மக்கள் நடந்துக்கொள்வது துரதிஷ்டவசாமானது என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். கேரளாவிலே செல்பி எடுக்கச் சென்றவர்களை யானைகள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இனியாவது மக்கள் இதனை தவிர்க்க வேண்டும்.