பா.ஜனதா தலைவர்களுக்கு ரூ. 1,800 கோடி.! வில்லங்கமாகும் எடியூரப்பாவின் பழைய டைரி…!

பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ. 1,800 கோடி வழங்கினார் என்ற விஷயம் விவகாரமாகியுள்ளது.

பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது பா.ஜனதாவின் மத்திய தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், கட்காரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எடியூரப்பா பணம் அளித்துள்ளார். பா.ஜனதா தலைவர்களுக்கு கொடுத்த தொகை எவ்வளவு என்பதை டைரியொன்றில் எழுதியுள்ளார். அதில் கையெழுத்தும் எடியூரப்பா போட்டுள்ளார் என தி கேரவன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

வருமான வரித்துறையிடம் இருந்த டைரியின் தகவலை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இச்செய்தியை மையப்படுத்தி பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ. 1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலக்கட்டங்களில் பா.ஜனதாவின் மத்திய தலைவர்களுக்கு ரூ. 1,800 கோடி வழங்கியுள்ளார். மேலும் பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவிற்கும், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பணம் வழங்கியுள்ளார். தன்னை பாதுகாவலர் என அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ள ஒவ்வொரு தனிநபரும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

இத்தகவல்கள் அடங்கிய டைரி தொடர்பாக உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதனை லோக்பால் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். எடியூரப்பா 2009 காலகட்டங்களில் வழங்கிய தொகையென்றும், டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் எடியூரப்பா கையெழுத்திட்டு ஆவணப்படுத்தி உள்ளார். “இது உண்மையோ அல்லது பொய்யோ? எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய இந்த டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறையிடம் உள்ளது. அப்படியானால் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஏன் அதை விசாரிக்கவில்லை?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.

எடியூரப்பா பதில்

இதற்கு பதிலளித்துள்ள எடியூரப்பா, இது காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான். மோடியின் புகழ் அதிகரித்துவருவதால் காங்கிரஸ் விரக்தியில் உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே தோல்வியை தழுவிவிட்டனர். ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். வரவிருக்கும் தேர்தல்களில் லாபம் அடைய ஊடகங்களில் அவர்களுடைய கதையை பரப்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் பொருத்தமற்றது மற்றும் தவறானது. இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கை பதிவு செய்ய மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Next Post

இந்தியாவில் மாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி இடம்...!

Sat Mar 23 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email இந்தியாவில் மாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி இடம் கிடைத்துள்ளது என கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநில மக்களிடம் அம்மாநில செயல்பாடு தொடர்பாக சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை