தமிழக காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: எச். ராஜாவை எதிர்த்து போட்டியிடுவது யார்? ‘சஸ்பென்ஸ்’

சிவகங்கையில் எச். ராஜாவை எதிர்த்து போட்டியிடுவது யார்? என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் 8 தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் விபரம்:-

திருவள்ளூர் – ஜெயக்குமார் 2. சிவகங்கை – அறிவிக்கப்படவில்லை. 3. விருதுநகர் – மாணிக் தாகூர் 4. தேனி – ஈவிகேஎஸ் இளங்கோவன் 5. திருச்சி – திருநாவுக்கரசர் 6. கரூர் – ஜோதிமணி 7. கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார் 8. ஆரணி-விஷ்ணுபிரசாத் 9. கன்னியாகுமரி – வசந்தகுமார். என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கையில் அதிமுக-பா.ஜனதா கூட்டணியில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தில் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சித் தலைமை யோசிப்பதாக தகவல் வெளியாகியது.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி இல்லை என்பது உறுதி ஆனாலும், தனது ஆதரவாளர் ஒருவரே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சுதர்சன நாச்சியப்பனும் அங்கு போட்டியிட விரும்புவதாலும் சிவகங்கை தொகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சஸ்பென்ஸ் தொடர்கிறது.

Next Post

தென்னிந்தியாவில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்மதம்...!

Sat Mar 23 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநில அமேதி தொகுதியில் போட்டியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அங்கு போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை