‘தலைவி’ படத்தில் ‘ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா…

Read Time:2 Minute, 15 Second

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்க பிரியதர்ஷினி, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகிய 3 இயக்குநர்களுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘தலைவி’ திரைப்படத்தை விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார் மற்றும் ஜி. வி. பிரகாஷ்ராஜ் இசை அமைக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் கங்கனா ரனாவத் மற்றும்  வித்யாபாலனிடமும் பேசி வந்தனர்.

இந்நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கனா தமிழில் ஏற்கனவே, ஜெயம் ரவி ஜோடியாக 2008-ல் வெளியாகிய தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்தப் படத்தின் கதையை பாகுபலி கதாசிரியரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவுமான விஜ யேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

சசிகலாவாக சாய் பல்லவி நடிப்பாரா? என்ற கேள்வி தொடர்கிறது. சாய் பல்லவி தாம் தூம் படத்தில் கங்கனாவின் தோழியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சத்தமின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.