‘பிரியாணி, புரோட்டா கடை என எதையும் விடமாட்டார்கள்!’ திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி

Read Time:1 Minute, 25 Second

‘பிரியாணி, புரோட்டா கடை என எதையும் விடமாட்டார்கள்’ என திமுகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், திமுககாரர்கள் பிரியாணி கடை, புரோட்டா கடை என்று எங்கு சென்றாலும் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பது கிடையாது. அவ்வளவு அராஜகம் செய்கிறார்கள். பிரியாணி, புரோட்டா கடை மட்டும் கிடையாது அழகு நிலையம் சென்றால், பொருட்களை தூக்கி போட்டு உடைப்பது பெண்களை எட்டி உதைப்பது என்று அட்டூழியம் செய்கிறார்கள்.

எதிர்கட்சியாக இருக்கும்போதே திமுக, இப்படி அராஜகம் செய்கிறது என்றால், ஆளுங்கட்சியாக வந்தால் நம்மால் வழ முடியுமா. சிந்திக்க வேண்டும். ஆனால், அம்மா ஆட்சியில் சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம். அராஜகத்தில் ஈடுபடுபவர்களை அம்மாவின் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்றார்.