இந்தியாவில் மாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி இடம்…!

இந்தியாவில் மாநில முதல்வர்கள் செயல்பாட்டில் எடப்பாடி பழனிசாமி கடைசி இடம் கிடைத்துள்ளது என கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநில மக்களிடம் அம்மாநில செயல்பாடு தொடர்பாக சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் செயல்பாடு சிறப்பாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்து அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

தெலுங்கானாவில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 68.3 சதவீதம் பேர் சந்திரசேகர் ராவ் நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். சந்திரசேகர் ராவின் செயல்பாட்டில் ஒட்டுமொத்த நிகர மனநிறைவு வீதம் 79.2 சதவீதமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தை இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூரும், மூன்றாவது இடத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், நான்காவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஐந்தாவது இடத்தில் கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமியும் உள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயனசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ஆகியோரின் செயல்பாட்டில் மனநிறைவு இல்லை என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்ட முதல்வர் வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி இடத்தை வாக்காளர்கள் வழங்கியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக செயல்படுவது அந்த கட்சிக்கு சிறப்பானதாக இருக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் குறித்து 52 ஆயிரத்து 712 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதில் 22 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வரிசையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 11-வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

Next Post

இந்தியாவில் ரூ.8,100 கோடி வங்கி மோசடி செய்துவிட்டு தப்பிய ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது

Sat Mar 23 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email இந்தியாவில் ரூ.8,100 கோடி வங்கி மோசடி செய்துவிட்டு தப்பிய ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையகமாக கொண்டு செயல்பட்ட ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை […]

You May Like

அதிகம் வாசிக்கப்பட்டவை