ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனாவின் சம்பளத்தை பார்த்து வாய் பிளக்கும் இந்தி சினிமா…!

Read Time:4 Minute, 9 Second

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனாவிற்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி இந்தி சினிமாவை ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய தமிழ்த் திரைப்பட இயக்குநர் விஜய் இயக்குகிறார். பாலிவுட்டில் இத்திரைப்படத்திற்கு ‘ஜெயா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடிப்பதில் பெருமிதம் அடைவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கங்கனா கூறுகையில், “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா ஜி. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதா ஜியாக நடிப்பது மகிழ்ச்சியாக உளளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனாவிற்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி இந்தி சினிமாவை ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது. இப்படத்தின் வாங்கும் சம்பளம் மூலம் இந்தியாவிலே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்கிறார். இப்படத்திற்காக கங்கனா ரூ. 24 கோடி சம்பளமாக பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கு ரூ. 24 கோடி கங்கனாவிற்கு சம்பளாமாக கொடுக்கப்படுகிறது. கங்கனாவின் பிரபலம் இந்தியா முழுவதும் படம் சென்றடைய உதவும் என தயாரிப்பாளர், இயக்குநர் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே கங்கனாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டனர்,” என இந்த படம் தொடர்பான நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரூ 24 கோடி சம்பளம் என்பது இந்தியாவில் இதுவரையில் எந்தஒரு பெண் நடிகையும் பெறாத சம்பளமாகும். சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோனேவுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் இருந்து இரண்டு மடங்கு அதிகள அளவு சம்பளம் கங்கனாவிற்கு கிடைக்கிறது. தீபிகா பத்மாவதி படத்துக்கு ரூ 13 கோடி சம்பளமாக வாங்கினார். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஷாஹித் கபூருக்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

இப்போது கங்கானாவிற்கு வழங்கப்படும் சம்பளம் இந்தி திரையுலகை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க செய்துள்ளது. கங்கானா ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு தொடர்பான மணிக்கர்னிகா திரைப்படத்தில் அசத்தியிருப்பார். சிறந்த நடிகையும் ஆவார். எதையும் துணிச்சலாக பேசும் அவர் எத்தனை நெருக்கடியிலும் தனித்து நின்று வெற்றியை நிலைநாட்டுகிறார். இப்போது அதற்கான பரிசுதான் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படித்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பாகும் எனவும் கூறலாம்.