புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட சிறுதானியம் ‘கேழ்வரகு’… இதயத்திற்கு ஆரோக்கியமானது

Read Time:5 Minute, 5 Second

கேழ்வரகு – ஆதிகாலம் முதலே உணவில் முக்கிய இடம் பிடித்து இருந்துள்ளது. தென்னிந்திய மக்களின் உணவுப் பட்டியலில் நீங்காத இடம் பெற்றது.

தமிழகம், கர்நாடகாவில் விளைச்சல் அதிகமாக காணப்படும் கேழ்வரகு இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இப்போது அரிசி அளவு சிறுதானியங்கள் பயன்படுத்துவது கிடையாது.

சிறுதானிய வகையில் இடம்பெற்றுள்ள கேழ்வரகு உணவுகள் உடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது.

கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட் பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன. 100 கிராம் கேழ்வரகில் புரதச்சத்து (7.7 சதவீதம்) மற்றும் நார்ச்சத்து (3.6 சதவீதம்) உள்ளது. மிக குறைந்த அளவாக 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது. உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு சத்துக்கள், நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற்செயல்களில் பங்கு வகிக்கின்றன.

  • கேழ்வரகில் உள்ள வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவி தசைகளை வலுவூட்டுகிறது.
  • ஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
  • டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன. மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.
  • மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது.
  • லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.

கேழ்வரகின் நன்மைகள்:-

கேழ்வரகில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் நீண்ட நேரம் பசி தாங்கும். எனவே, அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும். அமினோ அசிட் ட்ரைப்டோபோன் பசியுணர்வை கட்டுப்படுத்தி உடல் எடை குறைய உதவுகிறது.


கேழ்வரகில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மக்னீசியம்ம் இதயத் துடிப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டிற்கும் ஏற்றது. இதில் உள்ள நார்ச்சத்து கல்லீரல் மற்றும் குறைவான கொழுப்பு சத்து உடலுக்கும் ஏற்றது.


பால் இல்லாத ஒருபொருளில் அதிகளவு கால்சியம் உள்ளது என்றால் அது கேழ்வரகு மட்டுமே. கால்சியம் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

கேழ்வரகு உணவு.

உணவில் கேழ்வரகை பயன்படுத்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமைகளை காட்டிலும் நார்ச்சத்து அதிகமாகவுள்ளது. அதிக நார்ச்சத்து சர்க்கரை அளவை குறைக்கிறது. கார்ப்போ ஹைட்ரேட் அதிகம் சாப்பிடும் உணர்வை குறைக்கிறது.


புரதச்சத்து அதிகம் கொண்ட கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள் உடலின் சதை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைய உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி எதிராக போராடுகிறது. வளர்ச்சிக்கான ஹார்மோன் உருவாக உதவுகிறது,


கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. உடலின் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கிறது. மனித உடல் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் தேவையானதை கொடுக்கிறது. பல்வேறு நலன்களை கொண்டிருக்கும் கேழ்வரகை உணவில் சேர்த்துக்கொண்டு வழமாக வாழ்வோம்.


கேழ்வரகை கொண்டு களி, கூல், தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா, புட்டு ஆகியவற்றை செய்து சாப்பிட்டு மகிழலாம்.