பாலிவுட்டுக்குச் செல்லும் கீர்த்தி சுரேஷ்! இரு வேடங்களில் நடிக்கிறார்..

Read Time:2 Minute, 0 Second

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, பின்னர், சூர்யா, விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், இரண்டாவது முறையாக விஜய் உடன் ‘சர்கார்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். தனது நடிப்பின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்து தனது திறமையை நிரூபித்திருந்தார்.

‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா, இந்தப் படத்தை இயக்குகிறார் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இரு தோற்றத்தில் தோன்றுவார் எனத் தெரிகிறது. இளவயது தோற்றம் மற்றும் வயதான தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி இத்திரைப்படம் உருவாக உள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.