நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிலிருந்து விலகினார் கமல்ஹாசன்…

Read Time:1 Minute, 29 Second

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. தேர்தல் கமிஷன் இந்த கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். கமல்ஹாசன் ராமநாத புரம் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியது.

தொண்டர்களும் அங்கு போட்டியிட வலியுறுத்தினார்கள். கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த பட்டியலில் 19 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அப்போது பேசிய கமல்ஹாசன் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.