பிரஜின் – சாண்ட்ரா தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

Read Time:2 Minute, 16 Second

பிரஜின் – சாண்ட்ரா தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் காதலிக்க நேரமில்லை தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரஜின். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக வெள்ளித் திரையிலும் தடம் பதித்தார். தற்போது விஜய் டிவியில் சின்னத்தம்பி தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் பிரஜின்.

இவரது மனைவி சாண்ட்ரா தொகுப்பாளராக இருந்து பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வந்தார். சிங்கம் 3 மற்றும் காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


கடந்த காதலர் தினத்தன்று பிரஜின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்தக் காதலர் தினம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், நான் அப்பாவாகவும், என் மனைவி அம்மாவாகவும் ஆகப்போகிறோம். எங்களுடைய பயணம் தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. தோழியாக, மனைவியாக, விமர்சகராக, தாயாக என் மனைவி இருந்திருக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அந்த வரம் எனக்கு அதிகமாகவே இருக்கு’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், இந்தத் தம்பதிக்கு அழகான இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தகவல் வெளிவந்துள்ளது. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக பிரஜினின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்த்துகள் பிரஜின் – சாண்ட்ரா!