சூர்யாவின் என்ஜிகே திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் ‘என்.ஜி.கே’. படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் என்ஜிகே திரைப்படம் வெளியாகும் தேர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
#NGKfromMay31 worldwide
— S.R.Prabhu (@prabhu_sr) March 25, 2019
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம் மே 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே.’ என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.