பா.ஜனதா விளம்பரத்தில் மீண்டும் ராணுவம்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Read Time:1 Minute, 21 Second

பா.ஜனதா விளம்பரத்தில் மீண்டும் ராணுவம் இடம்பெற்றது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

இந்தியப் படைகளின் புகைப்படங்களை அரசியல் கட்சிகள் பிரசராத்திற்காக பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனையடுத்து பா.ஜனதா வெளியிட்ட ‘மெயின் பி சவுக்கிதார் ஹூன்’ என்ற தலைப்பிலான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தேர்தல் விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி விளம்பரத்தில் ராணுவ வீரர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பா.ஜனதா தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜ் சமூக வலைதளங்களில் ‘ஷேர்’ செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. பிரதமர் மோடியும் இதை டுவிட் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கையை தொடங்கிய தேர்தல் ஆணையம் இதுகுறித்து 3 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி பா.ஜனதா தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது.