பரம்பரை அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது – பிரதமர் மோடி பேட்டி

Read Time:1 Minute, 45 Second

பரம்பரை அரசியல் என்னுடைய பிரச்சனை கிடையாது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ், திமுக, ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்பட பல கட்சிகளில் குடும்ப அரசியல் விஸ்தரித்து செல்கிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸை பிரதமர் மோடி கடுமையாக சாடி வருகிறார். குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “குடும்ப அரசியல் என்னுடைய பிரச்சனை கிடையாது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். ஒரு தனியார் நிறுவனம் போன்று செயல்படும் கட்சியில், யாரும் தலைவராக முடியாது. இது தவறான கொள்கையாகும். இதுபோன்ற குடும்ப அரசியலை வெளிக்கொண்டுவருவது மீடியாக்களின் பணியாகும்,” என கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படைகள் தாக்குதல் நடத்திய போது நான் கண்விழித்து இருந்தேன். ராணுவ வீரர்களுடன் தொடர்பில் இருந்தேன். விமானப்படையின் தாக்குதல் தொடர்பாக கேள்வியை எழுப்புபவர்கள் அனைவரும் முட்டாள்கள். தேசத்தின் மீதான என்னுடைய அன்பு மீது யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.