இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 விமானம் விழுந்து சிதறியது!

Read Time:1 Minute, 33 Second

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 விமானம் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தெற்கு ராஜஸ்தானின் சிரோகி பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானது. அட்டாலாய் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் காலை 11:45 மணியளவில் கோடானா பகுதியில் விழுந்து விபத்தில் சிக்கிய விமானம் தீ பிடித்து வெடித்து சிதறியது. எஞ்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலமாக குதித்து பத்திரமாக உயிர்தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷிய தயாரிப்பு மிக் ரக விமானமானது இந்தியாவிற்கு 1980 களில் வாங்கப்பட்டது. சமீப காலமாக இவ்வகை விமானங்கள் விபத்துக்குள் சிக்குவது விமர்சனத்திற்கு உள்ளானது. கடந்த மாதம் ராஜஸ்தானின் ஜெஷ்சால்மர் பகுதியில் மிக்-27 போர் விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது, இதிலிருந்த விமானி பத்திரமாக உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.