திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன்..!

Read Time:2 Minute, 20 Second

மதராசபட்டினம் படம் மூலம் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் இங்கிலாந்தை சேர்ந்த எமிஜாக்சன். விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் ரோபோவாக நடித்தார். ஆங்கிலம்,  தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் எமிஜாக்சனுக்கு ஜார்ஜ் பனாயிட் என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகியது.

இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு நாளான்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் 2020-ம் ஆண்டில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே கர்ப்பமாக இருப்பதாக எமி ஜாக்சன், காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் விட நான் ஏற்கனவே உன்னை அதிகமாக நேசிக்கிறேன் ஜார்ஜ், அது  மிகவும் தூய்மையான, நேர்மையான அன்பு. நம்முடைய குட்டி பனாயிட்டை சந்திக்க காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

ஜார்ஜ் பனாயிட்டோ இங்கிலாந்தின் பெரிய தொழிலதிபரான ஆண்ட்ரீஸ் பனாயிட்டோவின் மகன் ஆவார். இவர்களுக்கு பார்க் பிளாசா, ஹில்டன், டபிள் ட்ரீ உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன.