திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது…!

Read Time:2 Minute, 21 Second

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது.

அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட காட்பாடி பேரவை காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம். கதிர் ஆனந்தன் வீடு உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 29-ம் தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 30-ம் தேதி காலையில் அவருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 லட்சம் வரையில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

வேலூர் தொகுதி தேர்தல் செலவினப்பார்வையாளர் உத்தரவின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 29 – 30 தேதிகளில் வேலூரில் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் அட்டைப்பெட்டிகள் மற்றும் துணி பைகள், சாக்கு பைகளில் வைக்கப்பட்டு இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனையை மேற்கொள்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது.