பிரசாரத்தில் கைகுலுக்கிய ஜெகன்மோகன் சகோதரி மோதரத்தை உருவிய தொண்டர்…!

Read Time:2 Minute, 12 Second

ஆந்திராவில் பிரசாரத்தின் போது கைகுலுக்கிய ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளாவிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெகன்மோகன் ரெட்டி, அவருடைய சகோதரி ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்கிறர்கள். இருவரும் தொண்டர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றி, அவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார்கள். ஷர்மிளா பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களோடு, மக்களாக உள்ளதாக தெரிவித்து ஆதரவு திரட்டுகிறார்.

 குண்டூரில் பிரசாரம் செய்ய சென்ற அவர் கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் காரில் புறப்பட்ட போது தொண்டர்களிடம் கைகுழுக்கினார். அதிகமான தொண்டர்கள் கூட்டத்தில் கைகுழுக்கிய போது, திருட்டு தொண்டர் ஒருவர் கைகுலுக்குவதுபோல ‌ஷர்மிளாவின் மோதிரத்தை நைசாக உருவிக்கொண்டு சென்றுவிட்டார். ஷர்மிளா கையை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவருடைய கையை வலுவாக பிடித்து தொண்டர் நைசாக மோதிரத்தை உருவிவிட்டார். ஷர்மிளாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

கூட்டத்தில் தனது மோதிரத்தை திருடியது யார் என்பதை ஷர்மிளாவல் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் விரல்களை பார்த்தவாறு வருத்தத்துடன் மற்றொரு இடத்திற்கு பிரசாரம் செய்ய சென்றார். மோதிரம் திருடப்பட்ட விவகாரத்தை பெரும் பிரச்சனையாக்காமல் பிரசாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்.