பேஸ்புக்கில் காங்கிரசுடன் தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கம்…!

Read Time:4 Minute, 8 Second

கங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் சுமார் 687 பக்கங்களை முடக்குவதாக பேஸ்புக் தகவல் தெரிவித்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றன. பிரசாரம் களத்தைவிட சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படம், மீம்ஸ் மூலமாக சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் புதிய குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள் என சமூக வலைதளங்களில் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்திய அரசு உள்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக் விமர்சனங்களை எதிர்க்கொள்கிறது. 2019 தேர்தலில் எங்களுடைய தளத்தை போலியான தகவல்களை பரவ அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளது. வாக்காளர்களை பாதிக்கும் வகையில் எந்தவிதமான செயல்களையும் செய்தாலோ அல்லது அனுமதித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்திருந்தது.

பேஸ்புக்கில் அரசியல்ரீதியான விளம்பரங்கள் அளிக்கும் கட்சிகள், அரசியல்வாதிகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக் நிறுவனம் ஒப்படைத்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து வருகிறது. மேலும், போலியான செய்திகளைத் தடுக்கவும், வாக்காளர்கள் பாதிக்கப்படாமல் செய்ய தனிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது காங்கிரசுக்கு பின்னடைவாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தேர்தல் நடக்க 10 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு பின்னடைவாக பேஸ்புக் நடவடிக்கை ஒன்று அமைந்துள்ளது. அதாவது கங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் சுமார் 687 பக்கங்களை பேஸ்புக் நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முக்கியமான அரசியல் கட்சியை எதிர்த்து பேஸ்புக் எடுக்கும் இந்நடவடிக்கை ஒரு அறியசெயலாகும்.

பேஸ்புக்கில் இருந்து 687 கணக்குகளையும், பக்கங்களையும் நாங்கள் நீக்கி உள்ளோம் என கூறும் பேஸ்புக், பெரும்பாலான பக்கங்கள் தானியங்கி முறையில் கண்டுபிடிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டவை. இந்த கணக்குகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தகவல்தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடைவர்களின் தனிப்பட்ட கணக்குகளாகும். இவர்களின் முறையற்ற நடத்தையால், கணக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த பக்கங்களை நீக்குவதற்கு காரணம், இந்த கணக்கை பயன்படுத்தியவர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து, நெட்வொர்க்கில் போலியான கணக்கை பயன்படுத்தி செயல்பட்டுவந்தவர்கள். இவர்கள் தவறான நடத்தையால்தான் இந்த கணக்குகள் நீக்கப்பட்டன தவிர போலியான செய்திகளை பரப்பியதால் அல்ல.முறையற்ற நடத்தையை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் நாங்கள் தொடர்ந்து நிலையாக பணியாற்றி வருகிறோம். ஏனென்றால், எங்களின் சேவையை யாரும் தவறாக பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் தவறான நடத்தையையும், வைரஸ்களையும் பரப்பிய 103 பக்கங்கள், குழுக்களின் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.