ஆண்மையை அதிகரிக்க “ஏழைகளின் முந்திரி” வேர்க்கடலை

Read Time:9 Minute, 28 Second
Page Visited: 2548
ஆண்மையை அதிகரிக்க “ஏழைகளின் முந்திரி” வேர்க்கடலை

நிறைய புரதம், சிறிதளவு கொழுப்புச் சத்து, வைட்டமின் பி இவை ஒன்றாக அமைந்து ஆரோக்கியத்தை அளிக்கும் அதிசய உணவு ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைவகைகள். இந்தப் பெயரைக் கேட்டாலே பாதாம், பிஸ்தா, முந்திரி என்று நினைப்பதுதான் தவறானது. வேர்க்கடலையில் அதிக நன்மை கொடுக்கும் சத்துக்கள் உள்ளன என்பது முக்கியமான உண்மையாகும். வேர்க்கடலையில் தையாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது.

போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை வேர்க்கடலையில் நிறைந்துள்ளன. வேர்க்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து, மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

வேர்க்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம்.

ஆண்மையை அதிகரிக்கும்

வேர்க்கடலை செடி காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு பயிரிடப்பட்ட இடங்களை சுற்றி எலிகள் அளவு கடந்து குட்டி போடுவதைக் காணலாம். வேர்க்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கு இது உதவுகிறது. செடியை சாப்பிடும் ஆடு, மாடுகள் மற்றும் வயல்வெளியைச் சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதை காணலாம். வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும். பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.

வேர்க்கடலை.

வேர்க்கடலையை தினசரி சாப்பிடும் ஆண்களுக்கு பாலியலில் ஈடுபாடு அதிகரிக்கிறது என்பது ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் இ உள்ளிட்ட சத்துக்கள் உங்களுடைய உடலை பாலியலில் மிகவும் ஆர்வமாக ஈடுபடச் செய்யும். பாலுறுப்புகளுக்கான இரத்த ஓட்டத்தை மிகைப்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.


வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேக வைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.


கடலை எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலைப் போக்கி சிறுநீரைச் சிரமமின்றிக் கழிக்க உதவும். சிறுநீர்த்தாரை எரிச்சலைப் போக்குவதாகவும் மலச்சிக்கலை உடைத்து தாராளமாக மலத்தைக் கழிக்கச் செய்யும்.

எப்படி சாப்பிடுவது?

வேர்க்கடலையை பச்சையாக உண்பதைவிட வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடும்போது அதன் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்தி இருக்கின்றன. பச்சையாக உண்பதைவிட இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைப்பதாகவும். வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் முழுவதற்கும் தேவையான சத்துக்கள் அதில் கிடைத்துவிடும். உடலும் மனமும் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.

இதயத்திற்கு நலம்

வேர்க்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

நினைவாற்றல்

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. இது மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி’ என்று அழைக்கப்படுகிறது.

கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.

சர்க்கரை அளவைச் சரி செய்யும்

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %