காண்டாமிருக வேட்டைக்கு சென்றவனை சிங்கத்துக்கு இரையாக்கிய யானை…!

காண்டாமிருக வேட்டைக்கு சென்றவனை யானை சிங்கத்திற்கு இரையாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் காடுகள் அழிப்பும், விலங்குகள் அழிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காண்டாமிருகங்கள் கொம்புக்காக வேட்டையாடப்படுகிறது. இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இதுபோன்ற அவலம் நேரிடுகிறது.

உலகின் 80 சதவிகிதத்துக்கும் மேலான காண்டாமிருகங்கள் தென்னாப்பிரிக்காவில்தான் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேட்டையாடுதலால் இவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2013 தொடங்கி 2017 வரையிலான காலத்தில் வருடத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவில் மட்டும் வேட்டையாடப்பட்டு இருக்கின்றன. வேட்டையாடல் எண்ணிக்கை 2018-ல் 769 ஆக குறைந்தது. பெரும்பாலான வேட்டை இந்த க்ரூகர் தேசிய பூங்காவில்தான் நடந்திருக்கிறது.

2007 தொடங்கி 2014 வரை மட்டும் இந்தப் பூங்காவில் காண்டாமிருக வேட்டை என்பது 9,000 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலகில் எங்கும் இல்லாத அளவில் இந்த பூங்காவில் காண்டாமிருகங்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

காண்டாமிருகம்.

இப்போது அங்கு வேட்டைக்கு சென்றவனை யானைகள் சிங்கத்திற்கு இரையாக்கிய சம்பவம் நடந்துள்ளது. க்ரூகர் தேசியப் பூங்கா மிகவும் பாதுகாப்பானது. அங்கு மனிதர்கள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காண்டாமிருகங்களை வேட்டையாட ஒரு குழு உள்ளே சென்றுள்ளது. அப்போது ஒருவரை யானை பிடித்து துவம்சம் செய்துள்ளது. மீதம் இருந்தவர்கள் உயிர்தப்பிக்க காட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உயிரிழந்தவரின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, பணியாளர்களுக்கு மண்டையோடும், ஒரு ஜோடி டிரௌசர்களுமே கடந்த வாரம் கிடைத்தன. இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை ஆராய்ந்ததில் யானையின் கால்களில் மிதிப்பட்ட அவரது உடல் சிங்கங்களுக்கு இறையாகியுள்ளது. சிங்கங்கள் மண்டையோட்டை மட்டுமே மீதம் வைத்திருக்கின்றன எனத் தேடுதல் குழு தெரிவித்திருக்கிறது. இறந்தவரின் மரணத்துக்காக காரணம் என்ன என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வேட்டைக்கு சென்ற பிறரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பூங்காவின் மேலாளர் பேசுகையில், “க்ருகெர் பூங்காவில் அத்துமீறி நுழைவது தவறு. அதுவும் எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நடந்துவருவது முட்டாள்தனம். அத்தனை ஆபத்துகள் இருக்கின்றன இந்த வனப்பகுதியில். இந்தச் சம்பவம் ஒரு சான்றுதான். இதனால் தந்தையை இழந்து தவிக்கும் மகள்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இன்னும் சோகம் என்னவென்றால் அவரின் உடலை முழுவதுமாக மீட்கக்கூட முடியாமல் போய்விட்டது” என்றார்.

க்ரூகர் தேசிய பூங்கா.

மிருக வேட்டைகளால் கடுமையான சிக்கலை எதிர்க்கொண்டுள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில் இருந்து வேட்டையாடப்பட்டுக் கடத்தப்படும் காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிகப் பணம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமையன்று, 2.1 மில்லியன் டாலர் மதிப்பிலான காண்டாமிருகத்தின் கொம்புகளை ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிக்கிய காண்டாமிருகக் கொம்புகளில் அதிக மதிப்புடையது இதுவாகும். மனிதனின் அட்டகாசங்களுக்கு இடையே விலங்குகளும் அடுத்த தலைமுறையை காக்க வேண்டிய அவசியத்தில் உள்ளன. அவைகளுக்கு இடையூறு விளைவித்தால் அவை நம்மை தாக்கத்தான் செய்யும். இயற்கையைவிடப் பெரிய சக்திகளாக ஆகிவிட முடியாது, அதற்கு இப்போதைய சம்பவமே சான்றாகும்.

Next Post

கரும்பு தோட்ட வேலைக்காக பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் கான்ட்ராக்டர்கள்...!

Wed Apr 10 , 2019
கரும்பு வெட்டும் ஒப்பந்தக்காரர்கள் மாதவிடாய் பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்பவில்லை, எனவே கருப்பை நீக்கம் என்பது வேலைக்கான ஒரு விதிமுறையென்றாகிவிட்டது. மராட்டிய மாநிலம் மராத்வாடா பிராந்தியம் வருடம்தோறும் வறட்சியை எதிர்க்கொள்ளும் பிராந்தியமாகும். அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் இங்குள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர்வது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அக்காலங்களில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்த வருடம் முழுவதும் காலம் தள்ளவேண்டும். போதிய சம்பளமும் விவசாய பணிகளில் வேலைக்கு அமர்த்தும் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை