நாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா…

Read Time:3 Minute, 10 Second
Page Visited: 65
நாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா…

பா.ஜனதா வரலாற்றில் முதல்முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

17வது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜனதா, வரலாற்றில் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 428 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தேர்தலில் இதுவரையில் மொத்தம் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

“இன்னும் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம்,” என கட்சி தலைமை தெரிவிக்கிறது.

பா.ஜனதா 2009 தேர்தலில் 433 தொகுதிகளிலும், 2004 தேர்தலில் 364 தொகுதிகளிலும், 1999 தேர்தலில் 339 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மொத்த நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 543 ஆகும். பா.ஜனதா 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் போது போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 438 ஆக உயரும்.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. டெல்லி பா.ஜனதாவின் நிலைவும் உள்ளூர் மோதல் நிலைபாடு; காங்கிரஸ்-ஆம் ஆத்மி வியூகம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளும் பா.ஜனதா, வேட்பாளர்கள் அறிவிப்பை தாமதம் செய்கிறது. பா.ஜனதா ஆட்சி செய்யும் உ.பி.யில் 8 தொகுதிக்கும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிக்க வேண்டியது உள்ளது.

பஞ்சாப்பில் சிரோன் மணி அகாலிதளம் கட்சியுடன் பா.ஜனதா களமிறங்குகிறது. அங்கு 3 தொகுதிகளுக்கும், அரியானாவில் இரு தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் ஒரு தொகுதிக்கும் பா.ஜனதா வேட்பாளரை அறிவிக்க வேண்டியது உள்ளது. இந்த தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணியில்லாமல் போட்டுகிறது. இதுவும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாகும்.

மறுபுறம் அசாம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கூட்டணி காரணமாக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை தியாகம் செய்துள்ள பா.ஜனதா, இதுவரையில்லாத பிராந்தியங்களிலும் செல்வாக்க நிலைநாட்ட முயற்சிக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %