கவலைகளை விரட்டுவாள் காளிகாம்பாள்!

Read Time:10 Minute, 7 Second
Page Visited: 636
கவலைகளை விரட்டுவாள் காளிகாம்பாள்!

சென்னையில் ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய அம்பாள் காளிகாம்பாள். சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஜகன்மாதா எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சியம்மன்… தீயவர்களை அழிப்பதில் காளிகாம்பாள்… எனும் திருநாமத்துடன் அருள்புரிகிறார். புவனேஸ்வரியாக, ராஜராஜேஸ்வரியாக, ராஜமாதங்கியாக, காமாட்சியாக, பத்ரகாளியாகப் பல்வேறு வடிவங்களிலும் பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள். உலகை ஆள்வதில் அன்னை! என்று தன்னை வணங்குபவர்களின் துயர் தீர்க்கும் கமடேஸ்வரி அன்னை கோவில் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கருணை வடிவானவள் கொல்லூர் மூகாம்பிகை…!

அமைவிடம்:-

சென்னை, தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் பராசக்தி வீற்றிருக்கிறாள்.

முலவர்:- கமடேஸ்வர்
தாயார்:- ஸ்ரீ காளிகாம்பாள்
தலவிருட்சம்:- மா மரம்
தீர்த்தம் :- கடல் நீர்

தல வரலாறு

கற்பனைக்கும் எட்டாத அருள்தரும் சிவசக்தித்தலம் காளிகாம்பாள் கோவில் கி.பி 1639-ம் ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. காளிகாம்பாள் முதலில் தோன்றி அருள் பாலித்துக் கொண்டிருந்த இடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகம். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வெள்ளையர்களின் ஆட்சிக்குட்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியதால் பக்தர்கள் வந்து வழிபாடுகள் செய்வதில், சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து தற்போதுள்ள தம்புச்செட்டித்தெருவில் கோவில் கட்டப்பட்டது.

நெய்தல் நில மக்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பதால், ‘நெய்தல் நில காமாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார். இக்காளியம்மனை மீனவர்களும் விஸ்வகர்மாக்களும் சிவப்புக் குங்குமம் பூசி வழிபடுவதால் ‘சென்னம்மன்’ என பெயர் பெற்றார். சென்னம்மன், சென்னியம்மன் என தெலுங்கர்களும், கன்னடர்களும் இப்போதும் அழைக்கின்றனர்.

சிறப்பு தகவல்கள்:-


குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராணங்கள் கூறுகின்றது.


மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு.


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் யாதுமாகி நின்றாய் காளி என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும். மகாகவி பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றிய போது காளிகாம்பாளை வந்து வழிபடுவது வழக்கம். அப்போதுதான் ‘யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!’ என்னும் புகழ்பெற்ற பாடலை அன்னையை நினைத்துத்தான் பாடினார்.

யாதுமாக நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீதுநன்மையெல்லாம் – நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதிசக்தி தாயே – என் மீது
அருள்புரிந்து காப்பாய்!

என்று மகாகவி பாரதியார் பாடியது இந்த காளிகாம்பாளை தரிசித்துதான்.

காளிகாம்பாள் கோவில் சிவசக்தி தலமாக விளங்குகிறது. இங்கு எம்பெருமான் கமடேஸ்வரராகவும் அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி, அருள் பாலிக்கிறார். இங்கு உண்ணாமலை அம்மனுக்கும் சந்நிதி இருக்கிறது. இதனால், இங்கு வந்து வழிபட்டால், காஞ்சியையும், திருவண்ணாமலையையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.


ஆதி சங்கரரின் ஶ்ரீசக்கரம் இங்கு பதிக்கப்பட்டுள்ளதால் ஶ்ரீசக்கர நாயகியாகவும் திகழ்கிறார். அந்த ஸ்ரீசக்ர தரிசனம்… ஆயிரம் மடங்கு பலன்களை வாரி வழங்கும். காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றால், காளிகாம்பாளையும் அவளுக்கு முன்னே இருக்கிற ஸ்ரீசக்ரத்தையும் முழு ஈடுபாட்டுடன் தரிசிக்க வேண்டும். இக்கோவிலில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக ஸ்ரீசக்கர கிண்ணித்தேர் உள்ளது. வெண்கல கிண்ணங்களால் அமைந்த இந்தத் தேரில் மின்னும் விளக்கொளியில் அன்னை பவனி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

அகத்தியரால் வழிபடப்பெற்ற தன்னிகரற்ற குற்றாலம் ஸ்ரீ தரணி, பராசக்தி பீடம்

குங்கும பிரசாதம்

காளிகாம்பாள் குங்குமம் பெற்றாலே முக்தி. சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாக திகழ்வதுபோல், அம்பிகைக்கு குங்குமம் ஐஸ்வர்யமாகத் திகழ்கிறது. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம். அம்பிகையின் அருட்பிரசாதமான குங்குமத்தில் அம்பாளின் துவாரசக்திகளான ஜெயா, விஜயா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். எனவே நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டால், அவ்விருவரும் தேவிக்கு காவலாக இருப்பதைப் போலவே, நமக்கும் காவலாக இருந்து சகலவிதமான ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பது உறுதி.

எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சி.

காளிகாம்பாள்/கமடேஸ்வரர்

காளிகாம்பாள் என்றால் காளி. காளி என்றால் உக்கிரத்துடன் இருப்பவள். ஆனால் இங்கே காளி சாந்தசொரூபினி. அமைதியே உருவான திருமுகத்துடன், மந்தகாசப் புன்னகை தவழ, நம்மையெல்லாம் ஒரு குழந்தையைப் போல் ஏற்றுக் கொண்டு, நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறாள். அம்மையை வணங்கினால் இன்னும் வளமாக்குவாள் வாழ்க்கையை. லேசாக்குவாள் உங்கள் மனதை!. காளிகாம்பாள் கோவிலின் சுவாமி பேர் ஸ்ரீகமடேஸ்வரர். இவர் சந்நிதிக்கு வந்து, மனசாரப் பிரார்த்தனை செய்தால் நம்மளோட கர்வம் போன்ற கெட்டதுகளையெல்லாம் போக்கி அருள்பாலிக்கிறார். கமடேஸ்வரரை மனதாரப் பிரார்த்தனை செய்தால் கர்வம் அழித்து, நம்முடைய தடைகளையெல்லாம் தகர்த்து அருள்வார்.

அன்பின் திருவிடம் உமையவள் கோமதியின் தரிசனம்…

இந்த அன்னையை வணங்கினால் சக்தி மட்டுமல்ல பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம் என்று பக்தர்கள் கேட்கும் எதையும், கேட்பதற்கு முன்பாகவே அள்ளி அள்ளிக் கொடுப்பவள். இந்த காளிகாம்பாளை வணங்கினால் பாவ மூட்டைகள் எல்லாம் தொலையும், தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். மகாலக்ஷ்மியை ஒரு கண்ணாகவும் சரஸ்வதிதேவியை இன்னொரு கண்ணாகவும் கொண்டு வீற்றிருக்கும் காளிகாம்பாள், தனம் தானிய லாபத்தையும் கல்வி ஞானச் செல்வங்களையும் அள்ளி அள்ளித் தந்தருள்வாள் உங்களுக்கு!

காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வந்து வழிபட்டுச்செல்லும் இடமாகத் திகழ்கின்றது.

மணிக்கதவம் தாள் திறக்க மகேஸ்வர தரிசனம்… மன கவலைகளைப் போக்கும்…

பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் ஆடிப்பெருவிழா, வைகாசி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது.தமிழ் வருடப்பிறப்பான இன்று அன்னையை வழிப்பட்டு அருள் பெறுவோம்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %