நாடாளுமன்றத்துக்கு 4 வது கட்ட தேர்தல்; நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

17-வது நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக ஏப்ரல் மாதம் 11-ம் தேதியில் இருந்து மே மாதம் 19-ம் தேதி வரையில் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கு மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 303 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்துள்ளது. இன்று நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான 4–வது கட்டத்தை எட்டி உள்ளது.

இன்று பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மராட்டியத்தில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8, காஷ்மீரில் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) என 9 மாநிலங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று நடக்கும் தேர்தல் பா.ஜனதாவிற்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். ஏனென்றால் 2014 தேர்தலில் இந்த 72 தொகுதிகளில் பா.ஜனதா கட்சி 45 தொகுதிகளை கைப்பற்றியது. 45 தொகுதிகளில் ராஜஸ்தானில் 13, உத்தரபிரதேசத்தில் 12, மத்திய பிரதேசத்தில் 5, பீகாரில் 3, ஜார்கண்டில் 3, மராட்டியத்தில் 8, மேற்கு வங்காளத்தில் 1 தொகுதி அடங்கும். 72 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மோதல்

இன்று தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நேரிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த 3 கட்ட தேர்தல்களிலுமே வன்முறை நடந்தது. இன்றும் ஆங்காங்கே மோதல்கள் வெடித்தது. பா.ஜனதா, மத்திய படைகளை அதிகமாக பணியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்நிலையில் அசான்சோலில் மோதல் வெடித்துள்ளது. பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பாபுல் சுப்ரியோ கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

Next Post

10-ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது... 98.53 சதவீதங்களுடன் திருப்பூர் முதலிடம்

Mon Apr 29 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. முடிவுகளை அரசு இணையதளங்களான, […]

அதிகம் வாசிக்கப்பட்டவை