மாசடைந்து காணப்படும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை…

Read Time:3 Minute, 17 Second
Page Visited: 73
மாசடைந்து காணப்படும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை…

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தண்ணீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. குளத்திற்கு மழைநீர் மற்றும் வைகை நீர் ஆதாரமாக உள்ளது. பொய்கையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வழியின்றி காணப்படுகிறது. இக்குளத்திலிருந்து கோவிலுக்கு தினமும் அதிகாலை தீர்த்தம் (திருமஞ்சனம்) எடுத்து யானையின் மீது கொண்டு செல்லப்படும். கார்த்திகை திருவிழா, பங்குனி திருக்கல்யாண பட்டாபிஷேகத்தின் போது, முருகன் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படும்.

கோவில் யானை சரவணப் பொய்கையில் முருகனின் மீது நீர் தெளிக்கும் வைபோகமும் நடக்கும். இப்போது நீர் மாசுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக இது நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேபோன்று சுற்றியுள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைக்காக பொய்கையிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்படும். இத்தகைய புனிதம் நிறைந்த குளம் இப்போது மாசுப்பட்டு காணப்படுகிறது. பொய்கையில் அப்பகுதியினர் குளித்தும், துணிகளை துவைத்தும், பழைய பொருட்களை வீசியும், சோப்பு, சீகைக்காய் பவுடர், ஷாம்புகளை பயன்படுத்திய பாலிதீன் பாக்கெட்டுகளை நீரில் போட்டும் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பொய்கை சுகாதார சீர்கேடு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

“முன்பெல்லாம் கோவிலுக்கு வருபவர்கள் குளத்தில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்வார்கள். இனி அது நடக்குமா? என்றே தெரியவில்லை. மிகவும் அசுத்தமாக காட்சியளிக்கிறது,” என பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே பொய்கையை சீரமைக்கவும், சுத்தப்படுத்தவும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்து அறநிலையத்துறை குளத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் துணி துவைப்பது, சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்பாட்டை தவிர்த்து, புனித நீராட மட்டுமே பொய்கையை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %