‘10 மரக்கன்றுகளை நட்டால்தான் தேர்வில் பாஸ்…!’ பிலிப்பைன்ஸ் அரசின் புதிய சட்டம்

பூமி வெப்பமையமாதலால் உலகம் அழிவின் விளிம்பை நோக்கி செல்கையில் இயற்கையால் மட்டுமே பாதுகாப்பு சாத்தியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் இதற்காக டிரில்லியனுக்கும் அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும் என்றே ஆய்வாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதுவரையில் இதற்கான முயற்சி காணப்பட்டாலும், வெற்றியை சாத்தியமாக்கும் நகர்வு தென்படவில்லை என்பது உண்மையாகும்.

இப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அருமையான திட்டம் ஒன்றை கொண்டுள்ளது. எந்தஒரு திட்டமாகினாலும் சரி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் முழு ஒத்துழைப்பும், உண்மையும் இருக்கும் இதனால் வெற்றியும் உறுதி என்பதில் நம்பிக்கையை கொண்டு முக்கியமான ஒருநகர்வை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் 10 மரங்களை நட்டால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக 10 மரங்களையாவது நடுதல் வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. Graduation Legacy for the Environment Act என்ற இதுதொடர்பான சட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிபரின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இது சட்டமாக அமல்படுத்தப்படவிருக்கிறது.

சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய எம்.பி. கேரி அலெஜானோ, தொடக்கப்பள்ளிப் படிப்புகளை ஆண்டுக்கு 12 கோடி பேர் முடிக்கின்றனர். அதேபோல், உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளை கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் முடிக்கிறார்கள். கல்லூரிகளில் ஆண்டுதோறும் 50,000 பேர் பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால் 17.5 கோடி புதிய மரங்கள் ஆண்டுதோறும் நடப்படும். ஒரு தலைமுறையில் நமக்கு 52,500 கோடி மரங்கள் நமக்குக் கிடைக்கும். இதில், 10 சதவிகித மரங்கள் மட்டுமே நீடித்திருக்கும் என்று கணக்கிட்டாலும் 5,250 கோடி மரங்களை நாம் பெறலாம் என்றார். அவையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் எங்கெல்லாம் மாணவர்கள் மரங்களை வளர்க்கலாம் என்பதற்கும் தீர்வை அரசு அறிவித்துள்ளது. அதாவது, மரங்கள் வனப்பகுதியிலோ, சதுப்பு நிலம் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நகர்ப்புறங்கள், ராணுவம் அல்லது தனிநபருக்குச் சொந்தமான இடங்கள், கைவிடப்பட்ட சுரங்கத் தொழிற்சாலைப் பகுதிகள் அல்லது பொருத்தமான இடங்களில் நடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கான ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை வளர்ப்பதற்கும் நடுவதற்கும் தேவையான உதவிகளை சுற்றுச்சூழல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அரசு சார்ந்த துறைகள் செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய 4 பேர் கைது

Thu May 16 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 17-ம் தேதியுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதையும், பணம் கொடுப்பதையும் தடுக்கும் வகையில் அதிரப்படையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று […]

அதிகம் வாசிக்கப்பட்டவை