கடன் தொல்லை போக்கும் சுக்கிர வார பிரதோஷம்…!

பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று தரிசனம் செய்து வந்தால் பாபங்கள் நீங்கும் புண்ணியம் பெருகும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஞானமும் யோகமும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தோ‌ஷங்களை நீக்கும் நாளே பிரதோ‌ஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோ‌ஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

இந்நாளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ நாளில் நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.! கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

ஈசன் அருளால் எல்லா நலனும் வளமும் வந்து சேரும். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே சிறப்பும் சக்தியும் வாய்ந்தது. இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷம். இந்த நாளில், மறக்காமல் பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். இல்லம் சிறக்கும். செழிக்கும்.! அருகில் உள்ள சிவாலயங்களுக்கு செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள்.

பிரதோ‌ஷ தினத்தன்று, சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் கறந்த பசும் பால் கொடுத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுப்பது விசே‌ஷம். அது தவிர இளநீர்வழங்கியும் ஈசனை வழிபடலாம். சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை, பசும்பால், இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழிபடுங்கள். இந்தப் பொருட்களை விட, தும்பைப் பூ மாலை சூட்டி, சிவபெருமானை வழிபடுவது சகல தோ‌ஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Next Post

மத்திய அமைச்சரவையில் கடைசிநேர ‘டுவிஸ்ட்’...! இலாகா விவரம் வெளியானது

Fri May 31 , 2019
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் 57 பேர் மத்திய அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

அதிகம் வாசிக்கப்பட்டவை