நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை…

Read Time:4 Minute, 3 Second
Page Visited: 58
நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை…

தாம்பரம் அருகே அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் படித்து சாதனை படைத்துள்ளார்.

பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையே 2019-20-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதிநடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் எழுதினா். தேர்வு முடிவுகள் 5-ம் தேதி வெளியாகியது. இந்த முறை தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதா 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண்கள் எடுத்துள்ள ஜீவிதா அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் மூன்று மகள்களில் ஒருவர்தான் ஜீவிதா. மூன்று பெண் குழந்தைகளையும் அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். ஜீவிதா கடந்த 2015-ம் ஆண்டு, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.

இதனையடுத்து மருத்துவராக விரும்பிய ஜீவிதா, நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டார். 12-ம் வகுப்பு படிக்கும் போதே பயிற்சியை தொடங்கினார். இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்ற இவர், அதன்பிறகு கட்டணம் செலுத்த முடியாததால் வீட்டில் இருந்தபடி சொந்த முயற்சியில் நீட் தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை வாங்கிப் படித்து நீட் தேர்வுக்கு தயாரானார். அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. ஜீவிதாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே ஜீவிதா வெற்றி பெற்றாலும் கட்டணம் செலுத்த என்ன செய்வது என குடும்பம் தவித்து வருகிறது. என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார் ஜீவிதா. நன்றாகப் படித்தால் மருத்துவர் ஆகலாம். மற்றபடி அதற்காக எங்களால் செலவு செய்ய முடியாது என்று தாயார் கூறியதை கேட்டு வைராக்கியமாக படித்த ஜீவிதா வெற்றியை தனதாக்கியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %