1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள 300 ஆண்டு வயதான ஆலமரம் துளிர்விட்டது…

Read Time:3 Minute, 51 Second
Page Visited: 200
1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள 300 ஆண்டு வயதான ஆலமரம் துளிர்விட்டது…

1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள 300 ஆண்டு வயதான ஆலமரம் துளிர்விட்டது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதுமே இவ்வாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் படும் சம்பவமும் நடந்துள்ளது. இயற்கையை வஞ்சிக்கும் மனிதன், அது சீற்றம் கொள்ளும் போது மிகவும் கொடூரமான விளைவுகளை எதிர்க்கொள்கிறான். இப்போது மழையின்றி பெரிதும் பரிதவிக்கிறான். மரங்கள் மட்டுமே இந்த உலகை காப்பாற்ற முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வெயில் காரணமாக மைசூருவில் 1½ ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள 300 ஆண்டு வயதான ஆலமரம் காய்ந்துபோய் கிடந்தது. வருணா பகுதியில் உள்ள ஆலனஹள்ளி கிராமத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. மைசூருவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்மரத்தில் பல்வேறு மொழி படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் பாபா, படையப்பா ஆகிய படங்கள் இங்கு எடுக்கப்பட்டவை. இம்மரத்துக்கு 300 ஆண்டு வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆலமரம் கிளைகள் விட்டு சுமார் 1½ ஏக்கரில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. இந்த மரத்தை மைசூரு மாவட்ட மக்கள் பாரம்பரியமிக்க மரம் என்று பெயர் சூட்டி அழைத்து வருகிறார்கள். இவ்விடம் சிறந்த சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் இந்த பெரிய ஆலமரமும் காய்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கோடை காலத்தில் அந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இப்போது மைசூரு மாவட்டத்தில் கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தற்போது அந்த பெரிய ஆலமரத்தின் கிளைகள் துளிர்விட்டு பசுமை போர்த்தி காட்சி அளிக்கிறது. தற்போது இந்த மரம் பசுமை குடை போர்த்தியது போல் அழகுற காண்போரின் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
இதனால் தற்போது அந்த மரத்தை பார்க்கவும், அதன் நிழலில் ஓடி விளையாடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

2 மாதங்களாக காய்ந்து கிடந்த மரம் தற்போது பச்சை பசேல் என காட்சி தருவது கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். 300 ஆண்டு பழமையான மரம் கொண்ட இவ்விடத்தை சுற்றுலாதலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மரம் மைசூருவில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %