அத்திவரதர் தரிசனம் 17-ம் தேதி ரத்து

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் 17-ம் தேதி ரத்து செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். 39-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை நிற பட்டில், கைகளில் பச்சைக்கிளி ஏந்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசுகையில், ஏற்கனவே அறிவித்தபடி 16-ம் தேதி வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை அறிவுரைப்படியும், அர்ச்சகர்களை கலந்து ஆலோசித்ததன் அடிப்படையிலும், வருகிற 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 16-ம் தேதி வரைதான் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

16-ம் தேதி இரவு பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து காலநீட்டிப்பு செய்யப்படும். 2 மணிநேரம் கூடுதலாக அதிகப்படுத்தப்படும். 16-ம் தேதி எவ்வளவு பக்தர்கள் வருகிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ம் தேதி இரவு அத்திவரதர் அவர் வீற்றிருந்த அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படுவார். பொது தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் 2 இடங்களில் காத்திருக்கும் பந்தல்கள் அமைத்து 10 ஆயிரம் பக்தர்கள் வரை நிறுத்திவைத்து பகுதி, பகுதியாக தரிசனம் செய்யும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது கூடுதலாக எந்தெந்த இடங்களில் பார்க்கிங் இடங்கள் உள்ளதோ இந்த இடங்களின் பக்கத்தில் இன்னும் கொஞ்சம் பக்தர்கள் தங்க வசதியாக பந்தல்கள் அமைத்து ஒவ்வொரு பகுதியில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கி அவர்களுக்கு உரிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

Next Post

காஷ்மீர் பிரச்சினை... அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்...

Fri Aug 9 , 2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்று உத்தரவிட்டு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய தூதர்களை திருப்பியனுப்பியது. இரு நாட்டு வர்த்தக உறவையும் துண்டித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான […]

அதிகம் வாசிக்கப்பட்டவை