காஷ்மீர் விவகாரம்: எப்போது வரலாம்? ராகுல் காந்தி – ஆளுநர் இடையே தொடரும் வாதம்…!

உங்கள் அழைப்பை ஏற்கிறேன்; நான் எப்போது காஷ்மீர் வரலாம்?” என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராகுல் காந்தி.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் அதனையடுத்த கட்டுப்பாடுகள் தொடர்பாக காங்கிரசை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் அம்மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக் இடையே டுவிட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.

ராகுலுக்கு சவால்:

மத்திய அரசின் நகர்வை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்ததற்கு பதிலடிகொடுத்த சத்யபால் மாலிக், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை கூறுகிறார். ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிடலாம். மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசலாம். காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர்கூட காயமடையவில்லை. காஷ்மீருக்கு வருவதற்கு ராகுல் தயாரா? என கேள்வியை எழுப்பினார்.

விமானமல்ல சுதந்திரம்:

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை வந்து பார்வையிட வேண்டும் என்ற உங்களுடைய அழைப்பை நானும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிக் குழுவும் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு விமானம் அவசியமல்ல. ஆனால், மக்களை சந்திப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள். முக்கிய அரசியல்கட்சி தலைவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டார்.

அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி

இதற்கு பதில் அளித்த சத்தியபால் மாலிக், ராகுல் காந்தி எதிர்க்கட்சி பிரதிநிகள் குழுவினரை அழைத்துவருவதாக கூறி இங்கே அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

எப்போது வரலாம்

வாதம் நீண்டுவரும் நிலையில் சத்தியபால் மாலிக்கிற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, “அன்புள்ள மாலிக் அவர்களே, எனது டுவீட்டுக்கு தங்களது பலமற்ற பதிலைப் பார்த்தேன். உங்களது அழைப்பை ஏற்று நான் ஜம்மு காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன். அங்குள்ள மக்களை எந்த நிபந்தனைகளுமின்றி சந்திக்க விரும்புகிறேன். எப்போது நான் வரலாம்?” எனப் பதிவிட்டுள்ளார்.

Next Post

விங் கமாண்டர் அபினந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’...

Wed Aug 14 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email தமிழகத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்கு நாளை (ஆக.15) சுதந்திர தினத்தை ஒட்டி வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு […]

அதிகம் வாசிக்கப்பட்டவை