‘வானிலிருந்து வானிலுள்ள இலக்கை துல்லியமாக அழிக்க வல்லது’ இந்திய உள்நாட்டு தயாரிப்பு அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி..!

Read Time:2 Minute, 53 Second
Page Visited: 140
‘வானிலிருந்து வானிலுள்ள இலக்கை துல்லியமாக அழிக்க வல்லது’ இந்திய உள்நாட்டு தயாரிப்பு அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி..!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “வானிலிருந்து வானிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்” அஸ்தரா ஏவுகணையை ஏவி இந்தியா விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.

அஸ்த்ரா ஏவுகணைகள் குறுகிய தொலைவு மற்றும் நீண்ட தொலைவு இலக்குகளை சென்று தாக்கும் வல்லமைக்கொண்டது. இன்று (செப்டம்பர் 17) 70 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை வானில் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணையின் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் வானில் செல்லக்கூடிய இந்த அஸ்த்ரா ஏவுகணை ஏறக்குறைய 15 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது.

ஒடிசா கடற்கரையில், வங்காள விரிகுடா கடலில் இந்த அஸ்த்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சுகோப்-39 எம்கேஐ விமானத்தில் மூலம் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. விமானத்திலிருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழித்தன என்று பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த அஸ்த்ரா ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தும் போது ஏவுகணை சென்று துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்தது. பல்வேறு ராடார்கள், மின்னனு கண்காணிப்பு முறை, சென்சார் ஆகியவை மூலம் ஏவுகணைய பின்தொடர்ந்ததில் இலக்கை துல்லியமாக தாக்கியது தெரியவந்தது. இந்த ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது எனக் கூறியுள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %