உடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்..! தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !

Read Time:5 Minute, 42 Second
Page Visited: 553
உடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்..!  தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !

உடன்குடியில் சீனி கருப்பட்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் பனங் கருப்பட்டி , பனங் கல்கண்டு என்னும் பெயரில் சீனி கருப்பட்டி , சீனி கல்கண்டு உற்பத்தி செய்த 5 தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 40 டன் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பனைமரம்

மனிதனின் முயற்சி இல்லாமல் இயற்கையாகவே வளரும் தன்மை கொண்டது பனை மரங்கள், அது மனிதனுக்கு தேவையான பலவற்றை கொடுத்து உதவி வருகிறது. மனிதர்களுக்கு பல விதங்களில் உதவி வரும் பனை மரங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அழிவில் இருந்து பனை தொழிலை காக்க குளம், குட்டை, மண் அரிப்பு உள்ள இடங்களில் பனை மரங்களை நட ஏற்பாடு செய்யப்படுகிறது.

பதனீர், பனங்காய், பனம்பழம், பனங்கொட்டை, பனங்கிழங்கு, நுங்கு, பதநீரில் இருந்து கிடைக்கும் கருப்புக்கட்டி என்னும் கருப்பட்டி, வெள்ளைக் கருப்பட்டி, கற்கண்டு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பனை மர ஓலையில் செய்யப்படும் கலைநயமிக்க, வேலைப்பாடுகள் நிறைந்த உபயோகப்பொருட்கள் என பல அம்சங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் தான் பனை மரத்தை ‘கற்பகவிருட்சம்’ என்கிறோம்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவைகள் உடலுக்கு வலுசேர்த்து நீண்ட ஆயுளை தரும். நம் முன்னோர்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை சாப்பிட்டு திடகாத்திரமாக இருந்து உள்ளனர்.

பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறவும் கருப்பட்டி முக்கியமானதாக விளங்குகிறது. காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி போட்டு குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்று மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர். கருப்பட்டியானது ரத்தத்தை சுத்திகரித்து உடலை சுறுசுறுப் பாக்குவதோடு, மேனியை பளபளப்பாகவும் வைக்கும். இப்போது கருப்பட்டியின் நலன்களை அறிந்து மக்கள் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அதேநேரம், பனை மரங்கள் அழிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் பனைத் தொழில் பாதிப்படைந்து, கருப்பட்டி உற்பத்தி பன்மடங்கு குறைந்துள்ளது. இதனால், கருப்பட்டி கடுமையான விலை யேற்றத்தை இப்போது சந்தித்து வருகிறது.

ஒரிஜினல் கருப்பட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் கருப்பட்டி விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.300 முதல் ரூ.330 வரை விற்பனையான கருப்பட்டி, தற்போது ரூ.350 முதல் ரூ.370 வரை விற்பனையாகிறது.

பதநீர் சீஸன் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை மட்டும்தான். இந்த காலத்தில் தான் கருப்பட்டி தயாரிக்க முடியும். ஆனால், கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விலை குறைந்த சர்க்கரையை கொண்டு இந்த கலப்பட கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கப்படுகிறது, இவை சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சாட்டப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தரப்பில், சீனி கலக்காத சுத்தமான பதநீரில் இருந்து கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கப்பட்டால் மட்டுமே பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு என்று குறிப்பிட வேண்டும். சீனி 1 சதவீதம் கலந்திருந்தாலே அது கலப்படமானது என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் உரிமம் இல்லாமல் கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் 63ன் படி வழுக்கு தொடர்ந்து ரூ. 5 லட்சம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %