குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது !

Read Time:4 Minute, 30 Second
Page Visited: 452
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது !

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரப்பட்டினத்தில் தான் தசரா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு. காலை 7.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

கொடியேற்றம் முடிந்ததைத் தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. தினசரி மாலை 6 மணிக்கு இன்னிசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

அக்.8- சூரசம்ஹாரம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.

9-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க் கப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.

திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க
குறைவில்லாத வாழ்வருள்வாள் குலசை முத்தாரம்மன்…

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %