இந்தியாவின் முதல் ரபேல் விமானத்தில் இடம் பெற்றிருக்கும் RB-01 குறியீட்டின் பொருள்…

Read Time:2 Minute, 7 Second

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ரபேல் விமானங்கள் வருகிற அக்டோபர் 8-ம் தேதி பிரான்சில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ரபேல் போர் விமானத்தின் வால் பகுதியில் ஆர்பி-01 (RB-01 )என்ற குறீயிடு இடம்பெற்று உள்ளது. இந்திய விமானப்படையின் தளபதியின் பெயர் குறியீடாக எழுதப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் ராகேஷ் குமார் சிங் பதூரியா (இப்போது இந்திய விமானப்படையின் தளபதியாக உள்ளார்) ஆவார். அவருடைய பெயரே Rakesh Kumar Singh Bhadauria ஷாட்டாக RB-01என விமானத்தின் வால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று 1980-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்த பதுரியா ‘ஜாகுவார்’ படைப் பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். திறமையான பணியால் ‘ஸ்வார்ட் ஆப் ஹானர்’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். விமானங்களில் இருந்து குண்டு வீசுவதற்கு ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர். ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைப்பதற்கு முக்கிய பங்காற்றிய அவர், இதுவரை, 4,250 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். சுமார், 26 வகையான போர் விமானங்களை இயக்கும் திறமை பெற்றவர்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரபேல் விமானங்கள் இந்திய வானில் பறப்பது எப்போது? விமானப்படை தளபதி தகவல்