இந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி…!

Read Time:8 Minute, 17 Second
Page Visited: 424
இந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி…!

இந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தகவல் தெரிவிக்கிறது.

பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்துகொண்டிருந்த காட்டின விலங்கான காட்டுமாடை நமது மூதாதையர் வீட்டு பிராணிகளாக்கினர். இந்த காட்டுமாட்டில் காளை மாட்டை ஏர் உழவும், ஏற்றம் இறைக்கவும், வண்டி மாடாகவும் பழக்கி பயன்படுத்தினர். பெண் பசுக்களை சானத்திற்காகவும் சிறிதளவு பாலுக்காகவும் வளர்த்தனர். பெண் பசுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத காலம்.

மலைமாடுகள் வெயில், மழை, பனி போன்ற பருவ சூழலுக்கு தாக்குபிடித்து மேற்கூரையின்றி வெட்டவெளியில் வாழ்ந்துவரும் தன்மை உடையது. காணை நோய், குந்துக் காய்ச்சல் போன்றவை பெரும்பாலும் வருவதில்லை. இயற்கையாக மேய்ந்து வருவதால் மலைமாடுகளின் பால் ருசிமிக்கதாக கொழுப்பு சத்துடன் திகழும். இதனை குழந்தைகளுக்கு தரும் சமயம் நல்ல உடல் வளர்ச்சி கிட்டும். இந்த மலைமாடுகளின் பாலை காய்ச்சும் போதே நல்ல மணம் தெரியும். கூடுதலான அளவு வெண்ணெய்யும் கிடைக்கும்.

கூடுதல் பால் உற்பத்தி எனும் ஒரே காரணத்திற்காக மேல்நாடுகளில் இருந்து ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் எனும் கால்நடை இனங்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டது. வெண்மைப் புரட்சி என பெயர் சூட்டப்பட்டு அபரிதமான வரவேற்பை பெறவைத்துவிட்டது. ஆனால் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் பால் கொடுத்த இந்தியாவின் நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாறாக, கலப்பிண மாடுகளும் அதிகரித்துவிட்டது.

ஒருகாலத்தில் பசுவை நம்மை அண்டி வாழும் ஒரு வீட்டு விலங்காகத்தான் நம் தமிழர்கள் கருதி வந்தனர். ஆனால் மேல் நாட்டு பசுக்களின் வரவால் பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரம் என்பதாக கருதப்பட்டு வரும் நிலமை ஏற்பட்டது. ஆனால், பிரேசில் உட்பட சில நாடுகளில் இந்தியாவிலிருந்து சாஹிவால் போன்ற அதிக பால் கொடுக்கும் இனங்களை இறக்குமதி செய்து பராமரித்து வருகின்றனர். நமது நாட்டின் சிறப்பையும், வளத்தையும் நமக்க்கு அடுத்தவர்கள் சொன்னால் தான் புரியும்.

நம் நாட்டின் பூர்வ பசுக்கள் விவசாயத்தின் ஆதாரமாக விளங்கியது அன்னிய ஆதிக்கமும், மேல் நாட்டு மோகமும் சீமை பசுக்களை நோக்கி திருப்பிவிட்டது. இப்போது மீண்டும் நாட்டுப் பசுக்களை பேண வேண்டும் என்கின்ற எண்ணமும், செயலும் திரும்ப வர்த்துவங்கியுள்ளது. இந்த மாற்றம் நிலைத்து நீடித்தால் இழந்த ஆநிரை செல்வத்தை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

பசுக்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிப்பு…

இந்நிலையில் உள்ள பசுக்களின் எண்ணிக்கை தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி அவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ள 20-வது கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையில் பசுக்களின் எண்ணிக்கை 2012-ல் இருந்ததை விட தற்போது 18 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கால்நடைகள், எருமைகள், காட்டெருமைகள், காட்டெருதுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், நாய்கள், முயல்கள் மற்றும் யானைகள், மற்றும் கோழிகள், வாத்துகள், ஈமுக்கள், வான்கோழிகள், காடைகள் மற்றும் பிற கோழிகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிக்கையில், 2019-ம் ஆண்டில் நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 192.49 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டில் மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பசுக்களின் எண்ணிககி மட்டும் 145.12 மில்லியன் ஆகும். இது முந்தைய 2012 கணக்கெடுப்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

பசுக்கள் மற்றும் எருமைகள் உட்பட மொத்த பால் வழங்கும் கால்நடைகள் 125.34 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது கால்நடை கணக்கெடுப்பில் தகவல் தெரியவந்துள்ளது. பாலுக்கு இருந்த தேவையாலும் அதிக பால் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும் நாட்டு மாடுகள் படிப்படியாக ஓங்கப்பட்டப்பட்டதால் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் பசுக்கள் எண்ணிக்கை உயர்வுக்கு கலப்பின மாடுகளின் எண்ணிக்கையே கணிசமாக உயர்ந்து வருவதால் மொத்தமாக மாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்தியாவின் தனிப்பட்ட நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த, 2012ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, 16 கோடியாக இருந்தது; அது தற்போது, 13.98 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக காளை இனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %