எதிர்க்கட்சிகள் காட்டம்… #CAA போராட்டம் குறித்து ராணுவ தளபதி பேசியது என்ன?

Read Time:3 Minute, 55 Second
Page Visited: 101
எதிர்க்கட்சிகள் காட்டம்… #CAA போராட்டம் குறித்து ராணுவ தளபதி பேசியது என்ன?

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியிலாக துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டு இந்தியாவிற்கு ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்களாக கருதப்படுவர். இந்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனால் உயிரிழப்பும் நேரிட்டது.

எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் தரப்பில் பேதம் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இந்தநிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து நேரடியாக குறிப்பிடாமல் விமர்சனத்தை முன்வைத்தார்.


அவர் பேசுகையில், “தலைவர் என்பது வெறும் தலைமை ஏற்பது மட்டும் கிடையாது. நீங்கள் முன்னே செல்லும் போது, மற்றவர்கள் தங்களை பின்தொடர்வார்கள் என்ற எண்ணம் வேண்டும். இது சாதாரமானது அல்ல. மிகவும் எளிமையான விஷயம் போல தோன்றலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானது. உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தவறாக வழி நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் கிடையாது.


கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில்கூடி போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இதன் மூலம் நமது நகரங்களில் வன்முறை சம்பவஙகள் நடந்ததையும் பார்த்தோம். இது தலைமைத்துவம் கிடையாது,” என்றார்.


ராணுவ தளபதியாக இருந்துக்கொண்ட பிபின் ராவத் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, தலைமை என்பது ஒருவரின் அலுவலகத்தின் வரம்புகளை அறிவது என விமர்சனம் செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பிபின் ராவத்தின் பேச்சை விமர்சனம் செய்துள்ளன.


ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அனைத்து பாதுகாப்பு படைகளுக்கும் தலைவர் (சிடிஎஸ்) ஆவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய பதவியின் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு தலைமை ஆலோசகராக அவர் இருப்பார் என சொல்லப்படுகிறது. வடக்கு ராணுவத கமாண்டர் ரன்பிர் சிங்கிற்கும் சிடிஎஸ் பதவி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %