உ.பி.யில் துணை ராணுவப்படை குவிப்பு… இன்டர்நெட் ரத்து; நடப்பது என்ன?

Read Time:2 Minute, 7 Second
Page Visited: 49
உ.பி.யில் துணை ராணுவப்படை குவிப்பு… இன்டர்நெட் ரத்து; நடப்பது என்ன?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிங்களில் போராட்டம் நடக்கிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.

போராட்டத்தின் போது ஏராளமான பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. தீ வைத்து எரிக்கபப்ட்டது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதற்கிடையே போலீசாரும் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள், வீடியோக்கள் வெளியாகி வருகிறது.


இன்று (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகை முடிந்து முஸ்லிம்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அம்மாநில அரசு 21 மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பை ரத்து செய்துள்ளது.


தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகஊடங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோரக்பூர், ராம்பூர் உள்ளிட்ட பதற்றமான மாவட்டங்களில் வன்முறை நிகழாமல் இருக்க துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %