இந்தியன் ரெயில்வேயில் இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் முந்தைய காலாண்டை காட்டிலும் வருவாய் குறைந்தது. பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும், சரக்கு கட்டணம் ரூ.3,901 கோடியும் குறைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியன் ரெயில்வேயின் 8 சேவைகளை ஒன்றாக இணைத்து ‘இந்தியன் ரெயில்வே மேலாண்மை நிறுவனம்’ (ஐ.ஆர்.எம்.எஸ்.) என்ற ஒரே நிறுவனமாக மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரெயில்வே கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளது, கட்டணங்கள் உயரும் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார்.
ரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை நெறிப்படுத்த உள்ளோம். இதுபற்றி இப்போது விரிவாக கூறமுடியாது. கட்டணத்தை உயர்த்துவது என்பது மிகவும் தீவிரமான விஷயம். சரக்கு கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. சாலை மார்க்கமாக சரக்குகள் கொண்டு செல்லப்படுவதை சரக்கு ரெயிலுக்கு மாற்றுவது தான் எங்கள் இலக்கு. இறுதி முடிவு எடுக்கும் முன்பு விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார். ஆனால், ரெயில் கட்டண உயர்வு தொடர்பான தகவல்கள் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டியில் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி மற்றும் புறநகர் அல்லாத ரெயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From 1.1.2020 hike in train fares. @IndianExpress pic.twitter.com/s2B7AblFx9
— Avishek Dastidar (@avishekgd) 31 December 2019
சாதாரண வகுப்பு ரெயில்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி இல்லா விரைவு ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏசி வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் சீசன் ரெயில் கட்டணங்களில் மாற்றமில்லை எனவும் ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலைமாற்றம் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு கட்டண மாற்றம் இருக்காது.