சீனா நிறுவனத்தின் டிக்-டாக் செயலிக்கு அமெரிக்க ராணுவம் அதிரடி தடை… விபரம்:-

Read Time:5 Minute, 36 Second

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதை பயன்படுத்துகிறார்கள்.

டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிலும் காணப்பட்டது. நம் நாட்டின் இளைஞர்களை வளர்ச்சிப்பாதையில் செல்ல விடாமல் தடுத்து, திசை திருப்பும் நோக்கில் சீன நாட்டினர் ‘டிக்-டாக்’ செயலியை இந்தியாவில் பிரபலமாக்கி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ‘டிக்-டாக்’ செயலியை பிரபலமடையச்செய்து வருகிறார்கள். எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது, ஆனால் இந்தியாவை பெரிய மார்க்கெட்டாக பார்க்கும் டிக் டாக் நிறுவனம் அதனை மறுக்கிறது. இந்தியாவில் எப்படியோ கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என காலத்தை டிக்டாக் ஓட்டுகிறது. இந்நிலையில்
சீனா நிறுவனத்தின் டிக்-டாக் செயலிக்கு அமெரிக்க ராணுவம் அதிரடி தடையை விதித்துள்ளது. அதான் ஏனென்று பார்க்கலாம்…

பாதுகாப்பு அச்சுறுத்தலை மேற்கோள்காட்டி, அமெரிக்க ராணுவம் பிரபலமான குறுகிய வீடியோ பயன்பாடான டிக்டாக்கை தனது வீரர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. முன்னதாக டிசம்பரில், அமெரிக்க கடற்படை இணைய பாதுகாப்பு கவலைகள் காரணமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொபைல்போனில் டிக்டாக்கை பயன்படுத்த தடை விதித்தது.

அமெரிக்க ராணுவத்தின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை முதன்முதலில் வெளியிட்டுள்ள மிலிட்டரி.காம், டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைபேசிகளில் டிக்டாக்கைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ராணுவ வீரர்களுக்கு இராணுவம் அறிவுறுத்த தொடங்கியது என்று கூறுகிறது.

“டிக்டாக் பாதுகாப்பு அபாயங்களை கொண்டிருப்பதாக” அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை சைபர் விழிப்புணர்வு செய்தியையும் செய்தியில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதை தவிர்க்க டிக்டாக் செயலியை மொபைல் போன்களில் இருந்து நீக்கவும் என வீரர்களை அமெரிக்க ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க இளைஞர்களிடையே டிக்டோக் பிரபலமடைய தொடங்கியதும் அந்நாட்டு எம்.பி.க்கள் பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தினர்.

அக்டோபரில் இரண்டு எம்.பி.க்கள், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பான பயன்பாட்டை விசாரிக்க தொடங்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த கவலைகளுக்கு வழிவகுத்த மைய அச்சங்களில் ஒன்று, செயலி பயன்பாட்டை பயன்படுத்தி அமெரிக்க பயனர்களின் தனிப்பட்ட தரவை சீனா அணுக முடியும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படலாம் என்பதாகும்.

நவம்பர் 5, 2019 அன்று டிக்டாக்கின் அமெரிக்க பொது மேலாளர் வனேசா பப்பாஸ் வெளியிட்ட செய்தியில், “எங்கள் பயனர்கள் தங்கள் தரவை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உணர விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்… நாங்கள் அனைத்து அமெரிக்க பயனர் தரவையும் அமெரிக்காவில் சேமிக்கிறோம். டிக்டாக்கின் தரவு மையங்கள் முற்றிலும் சீனாவிற்கு வெளியே அமைந்துள்ளன. மேலும், வலுவான இணைய பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு பிரத்யேக தொழில்நுட்பக் குழு எங்களிடம் உள்ளது. ” என தெரிவித்தார். அமெரிக்க கொள்கைகளை கடைபிடிப்பதற்காக டிக்டாக்கின் அமெரிக்க அடிப்படையிலான குழு உள்ளது, ஆபாச படங்கள், ஸ்பேம் அல்லது வன்முறை போன்றவறில் பயன்பாட்டின் விதிகளை மீறும் உள்ளடக்கம் அகற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.