குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் – இஸ்ரோ அறிவிப்பு

Read Time:5 Minute, 28 Second
Page Visited: 112
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் – இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்கிறது. இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் 2 ஏவுதளங்கள் இருக்கின்றன. கடந்த 1971–ம் ஆண்டு முதலில் ரோகினி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஸ்ரீஹரிகோட்டா உலகப்புகழ் பெற்றுவருகிறது.

வின்வெளி துறையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், 3-வது தளம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3-வது தளத்தை அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தை தேடினார்கள். அப்போது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

2014 -ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் அப்போதைய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைப்பது குறித்து பரிசீலனை நடந்துவருகிறது என்று குறிப்பிட்டார். ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சில முக்கிய தகுதிகள் குலசேகரபட்டினத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ராக்கெட் ஏவுதளமானது கிழக்கு கடற்கரையோரமாக இருக்கவேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

மேலும் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்திருப்பது அவசியமாக பார்க்கப்படுகிறது.

ஏவுதளத்திற்கு உபகரணங்கள் கொண்டுசெல்லும் வகையில் துறைமுக, விமானதள மற்றும் ரெயில்வே வசதி அவாசியமானது. இவையனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் உள்ளது. குலசேகரன்பட்டினம் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அதாவது 8 டிகிரி வடஅட்சரேகையில் அமைந்துள்ளது. குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குலசேகரன்பட்டினம், கூடல்நகர் அமராபுரம் பகுதிகளில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், இஸ்ரோவின் கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களை விண்ணில் ஏவுவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க திட்டம் வகுத்திருக்கிறோம். ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சிறியரக ஏவுலங்களை இங்கிருந்து விண்ணுக்கு செலுத்தப்படும். எதிா்காலத்தில் இந்த ஏவுதளத்தின் பணிகள் விரிவாக்கப்படலாம். தென்துருவத்துக்கு சிறியரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்த ஏவுதளம் பயனுள்ளதாக அமையும். ஆரம்பகட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே சிறியரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடியில் ஏவுதளம் தயாரானதும், அங்கிருந்து சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஏவப்படும்.

இஸ்ரோவின் செயல்பாடுகளை அகலப்படுத்தும் வகையில் விண்வெளி தொழில்நுட்ப மையங்கள், விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், பிராந்திய விண்வெளி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %