‘பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டீர்கள்’ அமெரிக்கா பழிவாங்கப்படும் – ஈரான் சபதம்

Read Time:2 Minute, 3 Second

பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்பு படையின் தளபதி குவாசிம் சுலைமான் உயிரிழந்தார்.

இத்தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் டுவிட்டரில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு உள்ளார்.

அதில் ” ஐஎஸ்ஐஎஸ், அல்-நுஷ்ரா, அல்-கொய்தாவுக்கு எதிராகப் போராடி வந்த ஜெனரல் சுலைமானை கொலை செய்து, சர்வதேச தீவிரவாதத்தை அமெரிக்கா செய்துள்ளது. இது மிகத்தீவிரமான பேராபத்தை விளைவிக்கும், ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகப்படுத்தும் முட்டாள்தனமான செயலாகும். நேர்மையற்ற முறையில், யோசிக்காமல் செய்யும் சாகசங்களுக்கெல்லாம் அமெரிக்கா பொறுப்பேற்று அதை தாங்கிக்கொள்ள வேண்டும்” என எச்சரித்து உள்ளார்.

சுலைமான் கொல்லப்பட்டதற்கு மூன்று நாள் தூக்க தினத்தை ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகரப் படையின் முன்னாள் கமாண்டர் மோசின் ரேஸாய் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மோசின் ரேஸாய் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ” தளபதி குவாசிம் சுலைமானை கொன்ற அமெரிக்காவுக்கு எதிராக மூர்க்கத்தனத்தனமாக பழிவாங்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்