ஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு

Read Time:1 Minute, 17 Second

ஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் பாக்தாத் விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் உயிரிழந்தார். இதனையடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

மேலும், சுலைமான் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் எச்சரித்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள தஙகள் நாட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. “ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமானம் மூலம் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அது முடியாவிட்டால் வேறு பாதையை தேர்ந்தெடுங்கள்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.