பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்கா அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஈரான் – அமெரிக்கா மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் காணப்பட்டது.
அமெரிக்கா ஈராக்கில் மேற்கொண்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது. தற்போது, அமெரிக்கா பாக்தாத் நகரில் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்கா அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை செய்தியில், பயங்கரவாத குழுக்கள் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்களை இயக்குவதில் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.