வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

Read Time:3 Minute, 29 Second

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ஏகாதசி விரதம்.

ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்து கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவலாகும். மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.


வைகுண்ட ஏகாதசியின் போது பெருமாளின் மோகினி அலங்கார தத்துவம்


விரத முறை

ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.


அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும்.


பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, பகவானின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.


தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் பணி களைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும்.


ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.


மேலும் படிக்க

புண்ணியம் அருளும் வைகுண்ட ஏகாதசி ஏகாதசியின் புராண கதை …! ஏன்? எதனால்?


வைகுண்ட ஏகாதசியின் போது பெருமாளின் மோகினி அலங்கார தத்துவம்


நெல்லை நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் இரவில் திறக்கப்படும் சொர்க்கவாசல்..!


சொர்க்கத்தை விரும்பாத அனுமன்… காரணம் என்ன?


தமிழகத்தில் சொர்க்கவாசல் திறக்காத பெருமாள் கோவில்கள்…!