‘இதயத்தை நொறுக்கும் சம்பவம்’ஆஸ்திரேலியா தீயில் 480,000,000 விலங்குகள் இறந்துவிட்டதாக அச்சம்…!

Read Time:4 Minute, 12 Second

ஆஸ்திரேலியா காட்டுத்தீயில் 480,000,000 விலங்குகள் இறந்துவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக இப்பூமி மிகவும் கொடூரமான இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. இப்போது ஆஸ்திரேலியாவில் வெப்பம் அதிகரித்து காடுகள் அழிந்துவருகிறது. இதிலிருந்து நம்மை காற்றுக்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே கேடயம் மரம் வளர்ப்பு மட்டுமே. இப்போது மரம் நடுவதை முதன்மை பணியாக்க வேண்டிய கட்டாயம் ஆக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை வளர்ப்பதற்கு தேவையான பணியை நாம் அனைவரும் மேற்கொள்வோம். இப்பூமி மனிதர்களுக்குமானது கிடையாது, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்குமானது. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 480,000,000 விலங்குகள் இறந்துவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது. இச்செய்தி அனைவருடைய நெஞ்சையும் உடையச் செய்யும் விதமாக அமைந்துள்ளது, வெப்பத்தினால் கருகி செத்துக்கிடக்கும் விலங்குகளின் சடலம் பருவநிலை மாற்றத்தின் கொடூரத்தை உலகிற்கு முன்னதாக காட்டுகிறது. இப்பூமி வெப்பமையமாதலுக்கு இறையாகிவிடக்கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மனிதகுலம் எடுத்த ஆக வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்த காட்டுத் தீக்கு இதுவரை 1,300 வீடுகள் இரையாகி உள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 23 பேர் பலியாயினர். 12 பேர் மாயமாயினர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை தீயில் உயிரிழந்து உள்ளன என மதிப்பிட்டுள்ளதாக ஹஃபிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கோடையின் உச்சம் அதிகரித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சூடான மற்றும் வறண்ட நிலை காணப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் பேரழிவு தரும் காட்டுத்தீயை பதிவுசெய்த வெப்பம் மற்றும் காற்று வீசும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி இயற்கையை வேட்டையாடி வருகிறது.

இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது. விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஓமியோ பிராந்தியத்தில் ஒரே இரவில் தீ விபத்து 6,000 ஹெக்டேர் (23 சதுர மைல்) அளவுக்கு தீப்பிடித்ததாக கிப்ஸ்லேண்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.