சொர்க்கத்தை விரும்பாத அனுமன்… காரணம் என்ன?

Read Time:1 Minute, 7 Second

ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர்.

அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர் அனுமனை பார்த்து, ‘நீ பரமபதத்துக்கு (சொர்க்கம்) வருகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அனுமன் இந்த பூவுலகம் உங்கள் பாதம் பட்டதால் புண்ணிய பூமி ஆயிற்று. அமிர்தத்தைவிட மேலான ராமநாமத்தை சொல்லி பரமபதத்தில் கூத்தாட முடியாது. எந்த சிறப்புமே இல்லாதது பரமபதம்.

பூமியில் உங்கள் திருப்பெயரை சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பேன். பரமபதத்துக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார். ராமனும் அனுமனின் பக்தியை கண்டு மகிழ்ந்து என்றும் அழியாமல் இருக்கும் சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார். அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், அனுமன், கிருபாச்சாரியார், பரசுராமர், விபீ‌ஷணர், மார்க்கண்டேயர் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவர்.